எமது நோக்கு

சிறந்த பொதுச் சேவையின் மூலம் மிகவும் செழிப்பான கோட்டச் செயலகப் பிரிவாகத் திகழ.

எமது கொள்கை

அக்மீமன பிரதேச செயலகப் பிரிவின் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்து, பௌதீக மற்றும் மனித வளங்களை திறம்பட நிர்வகித்தல் மற்றும் ஒருங்கிணைப்பதன் மூலம், மக்களின் தேவைகளை திறமையாகவும், நியாயமாகவும், இணக்கமாகவும், அரச கொள்கைகளுக்கு இணங்க பூர்த்தி செய்வதன் மூலம் அதை மிகவும் வளமான பிரிவாக மாற்றுதல்.

 

கொழும்பு பிரதேச செயலகத்தின் வரலாறு

அக்மீமன பிரதேச செயலகம் காலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயலகமாவதுடன் அது வடக்கில் பத்தேகம பிரதேச செயலகத்தாலும் வடகிழக்கில் யக்கலமுல்ல பிரதேச செயலகத்தாலும் கிழக்கில் ஹபராதூவ பிரதேச செயலகத்தாலும் மேற்கு மற்றும் தென்மேற்கில் காலி கடவத்சத்தர பிரதேச செயலகத்தாலும் வடமேற்கில் போபெ போத்தல பிரதேச செயலகத்தாலும் எல்லையாகியுள்ளது.

ஐஐ ஆவது அக்போ பூபதிக்கு சொந்தமாகி இருந்த இனிப்பு  மாந்தோப்பின் காரணமாக அக்மீமன எனும் பெயர் பின்பு பிரசித்தியானதென்று பொது மக்கள் வழக்கில் கூறப்படுகின்றது.

ஐஐ ஆம் பராக்கிரமபாகு மன்னனில் அமைச்சரான தேவபத்திராஜாவினால் செய்யப்பட்டதாக கூறப்படும் யட்டகல விஹாரைப் போன்ற புனிதஸ்தளங்கள் இப் பிரிவிற்குள் அமைந்துள்ளன.

அவ்வாறே 55 ஏக்கர் நிலத்தில் பரவி இருக்கின்ற ஹியாரே நீர்த்தேக்கமும் 443 ஏக்கர் நிலத்தில் பரவி இருக்கும் எலுவில பறவை சரணாலயமும் அக்மீமன பிரதேச செயலக பிரிவிற்குள் அமைந்துள்ள கவர்ச்சிகரமான, மதிப்பை உயர்துகின்ற இடங்கள் இரண்டாகும்.

தோராய பகுப்பாய்வு 

காலி மாவட்டத்தில் 19 பிரதேச செயலக பிரிவுகளுள் காலி நகரத்திற்கு மிகவும் அருகில் அக்மீமன பிரதேச செயலகப் பிரிவு அமைந்துள்ளது.

கிழக்கு நெடுங்கோடு 80-13 மற்றும் 80-21க்கு இடையிலும

வடக்கு அகலக்கோடு 06-01 மற்றும் 06-07க்கு இடையிலும

அக்மீமன பிரதேச செயலகப் பிரிவு அமைந்துள்ளது. வடக்கில் பத்தேகம பிரதேச செயலகத்தாலும் வடகிழக்கில் யக்கலமுல்ல பிரதேச செயலகத்தாலும் கிழக்கில் ஹபராதூவ பிரதேச செயலகத்தாலும் மேற்கு மற்றும் தென்மேற்கில் காலி கடவத்சத்தர பிரதேச செயலகத்தாலும் வடமேற்கில் போபெ போத்தல பிரதேச செயலகத்தாலும் எல்லையாகியுள்ளது. அக்மீமன பிரதேச செயலகம் அக்மீமன தேர்தல் பிரிவைச் சேர்ந்தது. இந்தப் பிரதேச செயலகப் பிரிவு 6437 ஹெக்டயார் கொண்டது. 64 சதுர கி.மீ. ஆகும். நிர்வாக ரீதியில் 63 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன்  அதில்  சுமார் 116 கிராமங்கள் இருக்கின்றன. காலி மாவட்ட மொத்த நிலப்பரப்பில் 4மூ அளவு இதைச் சேர்ந்தது.

 

பணி புரிந்த பிரதேச செயலாளர்கள

பெயர் முதல் வரை
திரு ஆல்பர்ட் ரத்நாயக்க  1976 1977
திரு பியதாச சமரசிங்ஹ  1977 1978
திரு. சுனிமல் சேனாரத்ன 1978 1984
திரு. வுிஜித ஜயசுந்தர 1984 1990
திரு. கே.எச்.ஏ.கீர்த்திரத்ன 1991 1992
திருமதி லலிதா விஜேவிக்ரம 1992 1994
திரு கே.எச்.ஏ.கீர்த்திரத்ன 1994 1997
திரு விமல் ரூபசிங்ஹ`  1997  1998
திரு சிந்தக லொகுஹெட்டி  1999  2000
திரு எஸ்.சீ சில்வா  2000  2002
 திருமதி லலிதா விஜேவிக்ரம  2002  2006
 திருமதி தமயந்தி பரணகம  2006 2013 
பி.டி. ஜாகொட  2013 2020
திருமதி கே.ஜீ.பீ.பூர்ணிமா 
அபேசிரிகுணவர்தன
2020 2024
திருமதி டீ.ஜீ.எஸ். சஜீவனீ 2024  

News & Events

12
ஜூன்2023
2025 Made_In_Sri Lanka  பிராண்ட்

2025 Made_In_Sri Lanka பிராண்ட்

தொழில்முனைவோர் துறைகளில் 45 தொழில்முனைவோருக்கு மேட் இன் ஸ்ரீலங்கா...

குடியுரிமை சாசனம்

Scroll To Top